திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (13:51 IST)

என்னை பாதிக்கும் மூன்று விஷயங்கள்… சமந்தா நம்பிக்கை பதில்!

தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம்வந்த சமந்தா கடந்த ஆண்டு மையோசிட்டீஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சையில் தேறி குணமானார். இந்நிலையில் தற்போது படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளார். அவர் இப்போது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இவை தவிர அவர் கைவசம் வேறு படங்கள் இல்லை.

வேறு படங்கள் எதையும் ஒத்துக்கொள்ளாமல் சமந்தா ஒரு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு அமெரிக்கா சென்று மையோசிட்டிஸ் பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது ஒரு பேட்டியில் பேசியுள்ள சமந்தா “சோர்வாக உணரும் தருணங்களில் தோல்வியடைந்த திருமணமும், உடல்நலப் பிரச்சனைகளும் எனது வேலை பளுவும் என்னை பாதிக்கும்.  கடந்த சில ஆண்டுகளாக நான் மிகவும் சோர்வுற்று இருக்கிறேன்.  என் சோதனையானக் காலகட்டத்தில் என்னை போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நடிகர்கள் எப்படி அதில் இருந்து மீண்டுவந்தார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.  அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.” எனக் கூறியுள்ளார்.