திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Jeyakumar
Last Modified: சனி, 14 அக்டோபர் 2023 (12:55 IST)

மீண்டும் மருத்துவமனையில் சமந்தா? – வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமந்தா கடந்த வருடம் மயோசிடிஸ் என்ற நோயால் அவதிப்பட்டு வருவதாக அறிவித்தார். அதற்காக மருத்துவமனைக்குச்சென்று சிகிச்சையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.



 ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்களுக்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் ஓய்வு எடுப்பதாக அவரது நண்பர்கள் கூறியிருந்தார்கள்.

சமீபத்தில் அமெரிக்கா சென்று அங்குச் சிகிச்சை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது தனது  இன்ஸ்டாகிராமில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவது போன்ற படங்களை பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், தனது நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூஸ்டரின் நன்மைகள் பற்றி பகிர்ந்துள்ளார்.

Samantha


”இது, வெள்ளை ரத்த அணுக்களின்  உற்பத்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.தசைகளை வலுப்படுத்துகிறது. எலும்புகளை வலுவாக்குகிறது. இதயஅமைப்பு சரியாகச் செயல்பட வைக்கிறது, வைரஸ்களை எதிர்த்துப் போராடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.