1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2017 (19:29 IST)

விஷாலுக்கு மரியாதையா? அதெல்லாம் வேண்டாம்....

பிஎஸ்மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜூன், சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் இரும்புதிரை. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சியில், விஷால், சமந்தா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்தபடத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு தமிழில் வெளியாகும் சமந்தாவின் படமிது. இந்நிகழ்ச்சியில் சமந்தா பின்வருமாறு பேசினார்.
 
இரும்புதிரை படத்தில் கதையும், காட்சியும் உண்மையாக இருக்கும். அறிமுக இயக்குநர் மித்ரனின் இயக்கத்தில் நடித்தது சிறப்பான அனுபவம். அவருடைய இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சி. நான் விஜய் சார், சூர்யா சார் போன்ற மூத்த நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது அவர்களுக்கு மரியாதை அளித்து நடிக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்படத்தில் அவ்வாறு இல்லை. விஷாலுடன் நடித்தது என்னை விட வயதில் இளையவர் ஒருவரோடு நடித்தது போல் இருந்தது என தெரிவித்தார் சமந்தா.
 
முதலில் இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது.  ஆனால், விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டதால்  படம் வெளிவருவதில் தாமதமானது. தற்போது, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது.