1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (15:05 IST)

சமந்தா சாயல் அப்படியே இருக்கு - கார்ஜியஸ் லுக்கில் ஆத்மிகா!

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையணிந்து பன் கொண்டை போட்டுக்கொண்டு சமந்தா லுக்கில் கார்ஜியஸ் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டு " நான் எதை பார்க்கிறேன் என்று சொல்லுங்கள்" என கேப்ஷன் கொடுத்துள்ளார். நீங்க எதை பாக்குறீங்களா தெரியல... ஆனால், நாங்க எல்லோரும் உங்கள தான் பாக்குறோம்....