செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (15:28 IST)

நடிகையுன் நாக சைதன்யா டேட்டிங்… கிளம்பிய வதந்திகள்… கோபமான சமந்தா டிவீட்

நடிகை சமந்தா பதிவிட்டுள்ள டிவீட் இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடிகை சமந்தா சமீபத்தில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி, யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா நடிகை ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் நாக சைதன்யாவின் ரசிகர்கள் ‘இதுமாதிரி வதந்திகளைக் கிளப்பிவிடுவது சமந்தா தரப்பினர்தான்’ என்று டிவீட் செய்ய ஆரம்பித்தனர். இதைப் பார்த்து கடுப்பான சமந்தா “பெண்களை பற்றிய வதந்தி என்றால் அதை உண்மை என்பார்கள். அதுவே ஆண்களைப் பற்றிய வதந்தி என்றால் அதையும் ஒரு பெண் தலையில் கட்டுவார்கள். நாங்களே அதில் இருந்து வெளியே வந்துவிட்டோம். நீங்களும் வெளியே வந்து உங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.