அழகு ராணியே.... பேஷியன் நகை விளம்பரத்திற்கு சமந்தா கொடுத்த கார்ஜியஸ் போஸ்!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
பின்னர் 8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர்கள் அண்மையில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. திரும்ப சேர்ந்திடுங்கள் என கெஞ்சி தங்களது வருத்தத்தை பலரும் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது பேஷியன் நாகா விளம்பரத்திற்கு அழகு தேவதையை போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். அவரின் கியூட் அழகை வர்ணித்து ரசிகர்கள் கமண்ட்ஸ் செய்துள்ளனர்.