1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (14:52 IST)

’புஷ்பா’ பட பாடலுக்கு ஆட மறுத்தாரா சமந்தா? இயக்குனர் தகவல்!

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா டான்ஸ் ஆடினார் என்பதும் இந்த பாடல் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா தெலுங்கானா உள்பட பல மாநிலங்களில் பிரபலம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலுக்கு முதலில் டான்ஸ் ஆட சமந்தா தயங்கியதாகவும் அதன்பின் அவரை சமாதானப்படுத்தி ஆட வைத்ததாகவும் இயக்குனர் சுகுமார் கூறியுள்ளார்
 
சமந்தா நடித்த ரங்கஸ்தலம் என்ற படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடியது போல் நீங்கள் இந்த படத்தில் நடனமாட வேண்டும் என்று இயக்குனர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது அதுமட்டுமின்றி ஒரு திரைப்படத்தில் நடிக்கும் படத்திற்கு உண்டான சம்பளத்தை இந்த ஒரு பாடலுக்கு சமந்தா பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் முதலில் இந்த பாடலுக்கு நடனமாட சமந்தா மறுத்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது