1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (11:24 IST)

Cannes Film Festival 2022: நடுவர் குழுவில் தீபிகா படுகோனே!!

75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவில் ஒருவராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 
உலகின் மிகவும் மதிப்புமிக்க திரைப்பட கூட்டமான கேன்ஸ் திரைப்பட விழா, சினிமாவின் வளர்ச்சியை மேம்படுத்தும் மற்றும் உலகளாவிய திரைப்படத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த உலகளாவிய திரைப்படங்களை காட்சிப்படுத்துகிறது.
 
இந்த சர்வதேச போட்டியின் எட்டு உறுப்பினர்களை கொண்ட நடுவர் குழுவில் தீபிகா படுகோனே ஒரு பகுதியாக இருப்பார் என்று கேன்ஸ் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர். கேன்ஸ் 2022 ஜூரிக்கு பிரெஞ்சு நடிகர் வின்சென்ட் லிண்டன் தலைமை தாங்குவார். 
மேலும் ஈரானிய திரைப்பட தயாரிப்பாளர் அஸ்கர் ஃபர்ஹாடி, ஸ்வீடிஷ் நடிகை நூமி ராபேஸ், நடிகை திரைக்கதை எழுத்தாளர் ரெபேக்கா ஹால், இத்தாலிய நடிகை ஜாஸ்மின் டிரின்கா, பிரெஞ்சு இயக்குனர் லாட்ஜ் லை, அமெரிக்க இயக்குனர் ஜெஃப் நிக்கோல்ஸ் மற்றும் நார்வேயைச் சேர்ந்த இயக்குனர் ஜோச்சிம் ட்ரையர் ஆகியோர் நடுவர் குழுவில் தீபிகா படுகோனுடன் இணைவுள்ளனர். இந்த திருவிழா மே 17 முதல் 26 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த அறிவிப்பை நடிகை தீபிகா படுகோனே தனது சமூக வலைத்தளப் பக்கஹ்திலும் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.