திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 மே 2022 (16:30 IST)

தொடரும் சர்ச்சைகளுக்கு மத்திய தொடர் விருதுகளை குவிக்கும் ஜெய்பீம்!

போஸ்டன் திரைப்பட விழாவில் ஜெய்பீம் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது. இந்த செய்தியை 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 
சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கி வெளியான படம் ஜெய் பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் பரவலான பாரட்டுகளை பெற்ற நிலையில் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் விருதுகளை பெற்று வருகிறது. 

இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்து காட்டியிருந்ததாக ருத்ர வன்னிய நிறுவன தலைவர் சந்தோஷ் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பேரில் ஜெய்பீம் பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்த வழக்கின் மீதான விசாரணையை மே 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த படத்தின் மீதான சர்ச்சைகள் ஒருபக்கம் நீடித்தாலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் ஜெய்பீம் திரைப்படம் விருதுகளை பெற்று வருகிறது. 
 
நேற்று முன்தினம், டெல்லியில் நடைபெற்ற தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்ற நிலையில், தற்போது போஸ்டன் திரைப்பட விழாவில் சிறந்த கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர்கான விருது எஸ்.ஆர். கதிருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.