சன் பிக்சர்ஸுடன் கைகோர்க்கும் அஜித்? வெளியான தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில், அஜித் நடிக்கவுள்ள புதிய படம் விடாமுயற்சி.
வரும் அக்டோபர் முதல் வாரத்தில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இப்படத்தில் லியோ பட வில்லன்கள் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், 'அஜித்63' படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில், rரஜினி நடித்த, சன் பிக்சர்ஸின் ஜெயிலர் படம் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், அஜித்துடன் சன்பிக்சர்ஸ் கூட்டணி உறுதியானால் இப்படம் நிச்சயம் வசூல் சாதனை படைக்கலாம் என கூறப்படுகிறது.