வாழ்க்க ஒரு வட்டம்தான் போல… முதல் பட டைட்டில்தான் கடைசி படத்துக்குமா?
GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் ஒரு பிரம்மாண்டமானப் பாடல் காட்சியை படமாக்கினார் இயக்குனர் வினோத். இப்போது சென்னையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இதையடுத்து ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தற்போது இந்த படத்துக்கு நாளைய தீர்ப்பு என்ற பெயரை வைக்க பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் முதல் படத்தின் தலைப்பும் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் இந்த தலைப்பு கூடுதல் கவனம் பெறும் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.