வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (10:02 IST)

போதும் 10 வருஷம் ஆகிருச்சு... சமந்தா எடுத்த அதிரடி முடிவு!

இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். 

 
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கினார். 
 
இந்நிலையில், தற்போது சமந்தா தான் நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாவது சீசன் ப்ரமோஷனில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போது அந்த நிலைமை மாறி இருக்கிறது. 
 
10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இனிமேல் கவர்ச்சியாக நடிக்காமல் நடிப்பு திறமையை வெளியே கொண்டு வருகிற மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன் என தனது முடிவை தெரிவித்துள்ளார்.