திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 மார்ச் 2021 (10:57 IST)

சிவராத்திரியில் சத்குருவுடன் ஆட்டம் போட்ட முன்னணி நடிகைகள்!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழாவில் முன்னணி நடிகைகள் கலந்துக்கொண்டுள்ளனர். 

 
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில் நேற்றும் இந்த விழா ஆடலும் பாடலும் என சிறப்பாக நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகைகள் சமந்தா, ரகுல் பிரீத் சிங், தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
அப்போது இவர்கள் நடனமாடினர். மேலும் ஆதியோகி சிலை முன்பு எடுத்த செல்பி புகைப்படத்தையும் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.