திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வியாழன், 6 மே 2021 (13:11 IST)

கொரோனாவால் உயிரிழந்தவரின் மகன் படிப்பு செலவை ஏற்ற சூப்பர் ஸ்டார் நடிகர்!

கொரோனா வைரஸால் உயிரிழந்த ஒருவரின் மகன் படிப்பு செலவை முழுவதுமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் பெற்றுள்ளார்
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தந்தையை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்து விட்டார் என்றும் அதனால் தனது படிப்பை தொடர முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார் 
 
இதனை பார்த்த சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் ஒருவர் சல்மான்கானின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றார். அதை பார்த்த சல்மான்கான் உடனடியாக அந்த மாணவரின் கல்வி செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் அது மட்டுமின்றி அவரது குடும்பத்திற்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் எதிர்கால தேவைக்கு அந்த மாணவர் என்ன வேண்டுமானாலும் தன்னிடம் கேட்கலாம் என்றும் அந்த மாணவருக்கு சல்மான்கான் உறுதி கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது நன்றியை சல்மான்கான் அவர்களுக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது