1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (13:17 IST)

இந்த மாதமே தொடங்குகிறதா சல்மான் கான் & முருகதாஸ் இணையும் படத்தின் ஷூட்டிங்!

தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை முடித்ததும் முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் படத்தின் பெரும்பகுதியை படமாக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளாராம். 

இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்லன. இது தவிர மேலும் இரண்டு வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை சில நாட்கள் நடத்திவிட்டு மீண்டும் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்குக்கு அவர் திரும்புவார் என சொல்லப்படுகிறது.