ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (11:48 IST)

சல்மான் கான் & முருகதாஸ் படத்துக்காக 15 கோடியில் தாராவி செட்!

ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர். இதன் முதல் கட்ட ஷூட்டிங் கடந்த ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் தாராவியில் சில காட்சிகளை எடுக்க வேண்டியுள்ளதாம். அதற்காக தாராவி போன்ற செட் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த செட்டுக்காக 15 கோடி ரூபாய் அளவுக்கு செலவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.