வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (11:37 IST)

குட் பேட் அக்லி ஷூட்டிங்… இந்த வெளிநாட்டுக்குப் பறக்கும் படக்குழு!

அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை விட முன்பாகவே  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே மே மாதம் தொடங்கி ஐதராபாத்தில் சில நாட்கள் நடந்து முடிந்தது. அதன் பின்னர் கடந்த சில வாரங்களாக மீண்டும் நடந்த அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து முக்கியமானக் காட்சிகளைப் படமாக்க படக்குழு ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான விசா உள்ளிட்ட பணிகள் தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.