வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 9 அக்டோபர் 2021 (20:14 IST)

நாகசைதன்யா உடன் நடனமாடி அசரவைத்த சாய் பல்லவி - ரெண்டிங் வீடியோ!

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில அவர் தெலுங்கில் நாக சைதயன்யாவுடன் நடித்துள்ள லவ் ஸ்டோரிஸ் படத்தில் நடித்து மெகா ஹிட் கொடுத்துள்ளார். செப்டம்பர் 24ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏவோ ஏவோ களாலேஎன்ற வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு சாய் பல்லவியும் , நாகசைதன்யாவும் இணைந்து இந்த ஆடியுள்ள நடனம் வேற லெவலில் சாதனை படைத்து யூடியூப் ட்ரெண்டிங்கில் நம்பர் 4 இடத்தை பிடித்துள்ளது. சமந்தா விவாகரத்து அறிவித்த பின் சாய் பல்லவி நாகசைதன்யாவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ