சாய்பல்லவி தங்கச்சியா இது? அக்காவை அடிச்சு தூக்கிடுவாங்க போலயே!
பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய்பல்லவி ஒரே படத்தில் உலக பேமஸ் ஆனார். அதன் பிறகு தமிழில் மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் இன்னமும் பிரேமம் மலர் டீச்சராகவே அவரை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவரும் கூட. சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற ஒரு தங்கை இருக்கிறார். இவர் நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் ஹேப்பி போஸ்ட் ஒன்றை வெளியிட்டு நிறைய கியூட்டான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. கூடவே சிலர் அக்காவை அடுச்சு நொறுக்கிடுவீங்க சீக்கிரம் சில்வர் ஸ்க்ரீன்ல வாங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.