1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (10:15 IST)

சாய் பல்லவியின் லவ் ஸ்டோரி பட டீசர் வெளியீடு!

நடிகை சாய்பல்லவி நடித்துள்ள தெலுங்கு படமான லவ் ஸ்டோரி படத்தின் டீசர் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில அவர் தெலுங்கில் நாக சைதயன்யாவுடன் நடித்துள்ள லவ் ஸ்டோரிஸ் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.