செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:44 IST)

வெற்றிமாறன் பட வாய்ப்பை மறுத்த சாய்பல்லவி- பின்னணி இதுதானாம்!

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் பட்த்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துள்ளார் சாய் பல்லவி.

கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியார், கென் கருணாஸ், பசுபதி மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷுக்கு ஒரு மெஹா ஹிட் படமாக அமைந்தது அசுரன். அந்த படத்தில் வெற்றிமாறன் சாய்பல்லவியை அழைத்துள்ளார். ஆனால் அவர் அதை மறுத்துள்ளார்.

ஏனென்றால் வெற்றிமாறன் அவருக்கு வழங்கியது பிளாஷ்பேக்கில் வரும் சிறு கதாபாத்திரமான அம்மு அபிராமியின் கதாபாத்திரத்தை. அதனால் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்து சாய் பல்லவி அந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.