ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (12:32 IST)

அம்மா, தங்கையுடன் சாய்பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படம்! தங்கச்சி தான் செமயா இருக்காங்க !

பிரேமம் படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே தன் பக்கம் திசைதிருப்பியவர் நடிகை சாய்பல்லவி.



அந்த படத்திற்கு பிறகு தமிழ், மலையாளம் , தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டார். சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்து செம ஆட்டம் போட்ட ரவுடி பேபி பாடல் இணையத்தில் இன்றுவரை படு வைரலாக பரவி வருகிறது. 
 
இவரின் அறிமுக படம் பிரேமம் என்று தான் பலரும் நினைத்துவருகின்றனர். ஆனால், சாய் பல்லவி 2008-ல் வெளியான ஜெயம்ரவியின் தாம்தூம் படத்தில் கங்கனா ரணாவத் தோழியாக நடித்திருந்தார்.  
 
கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்ட இவர், சினிமாவில் அறிமுகமாகி நடிகர், டான்சர், மருத்துவர் என தனக்கு கைவந்த அத்தனை துறைகளிலும் தன் திறமையை வெளிபடுத்தினார். இப்படிபட்ட சாய் பல்லவி பற்றி பலருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு ஒரு அழகான தங்கை இருப்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. 


 
இந்நிலையத்தில் சமீபத்தில் நடிகை சாய் பல்லவி தங்கை மற்றும் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் உங்களை விட உங்கள் தங்கச்சி செமயா இருக்காங்க என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.