திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (08:59 IST)

தமிழில் ட்வீட் செய்த சச்சின்… மாஸ்டர் பிளாஸ்டரோடு இசைப்புயல்- வைரல் புகைப்படம்!

இந்தியாவின் மிகப்பெரும் இரு ஜாம்பவான்களாக ஏ ஆர் ரஹ்மானும், சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துள்ளனர்.

90 களில் இந்திய இளைஞர்களின் ஆதர்ஸ்மாக விளங்கியவர்கள் சச்சின் டெண்டுல்கரும், ஏ ஆர் ரஹ்மானும். இருவருமே சமகாலத்தில் வளர்ந்து தங்கள் உச்சங்களை தொட்டவர்கள். அதுபோல இருவரும் பல ஆண்டுகளாக நட்பு பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இருவரும் சந்தித்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர் “ஒரு நாள் முழுவதும் இசைப்புயலுடன் செலவிட்டேன்” என தமிழில் டிவீட் செய்ய அந்த புகைப்படமும், ட்வீட்டும் வைரலாகி வருகிறது.