திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (10:24 IST)

விஜய் என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும்… எஸ் ஏ சி பரபரப்பு பேட்டி!

நடிகர் விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.

நேற்று  முன் தினம் நடிகர் விஜய் பெயரில் அவரது அப்பா கட்சியைப் பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்த சில மணிநேரங்களிலேயே அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தன் ரசிகர்கள் யாரும் அதில் சேரவேண்டாம் என்று விஜய் தரப்பிடம் இருந்து அறிக்கை வெளியானது எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போல பெரிதாகியது. மேலும் விஜய்யின் அறிக்கையில் எனது பெயரையோ புகைப்படத்தையோ தவறாகப் பயன்படுத்துவர் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து எஸ் ஏ சி பிஹைண்ட்வுட்ஸ் இணையதளத்துக்கு அளித்த நேர்காணலில் கேள்வி எழுப்பியபோது ‘விஜய் என்னை வேண்டுமானால் ஜெயிலுக்கு அனுப்பட்டும். அப்படி அனுப்பினால் அப்பாவையே ஜெயிலுக்கு அனுப்பிய மகன் என்ற பெயர் வரலாற்றில் அவருக்குக் கிடைக்கட்டும்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் பெயரில் தொடங்கப்பட்ட கட்சியில் இருந்து பொருளாளர் பதவியில் இருந்து நான் விலகிவிட்டேன் என ஷோபா சந்திரெசேகர் அறிவித்துள்ளார்.