1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (20:49 IST)

’சாஹோ ’படத்தின் முதுகுத்தண்டு ’இவர் தான் ’ - ராஜமௌலி புகழாரம்

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் ,ஷ்ரத்தா கபூர், நடிகர் அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் ஜாக்கி ஷெராஃப்ப் போன்ற பல நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சாஹோ. இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி  வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு  வருகின்றன. ஹைதராபாத்தில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்க்கு திரைப்படத்தின் முன்னணி கதாசிரியர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
இதில் கலந்துகொண்ட ராஜமௌலி கூறியதாவது : நடிகர் பிரபாஸின் படம் வெற்றி பெற அனைத்து ரசிகர்களுமே எண்ணுவார்கள். இதற்கு காரணம் பிரபாஸ் எவரையும் தவறாக பேசமாட்டார். தன்னை சுற்றி பாசிட்டிவான ஆரோக்கியமாக சூழல் இருக்குபடி பார்த்துக்கொள்வார்.  இப்படிப்பட்ட எண்ணம் மற்றும் உணர்வுதான் ஏராளமான ரசிகர்களை அவருக்கு பெற்று தந்துள்ளது என்று தெரிவித்தார்.
 
மேலும்  இந்தப் படத்தின் போஸ்டர் வந்த பொழுதே எனக்கு தெரிந்தது இப்படத்தின் இயக்குநர்  சுஜித்தின் திறமை பற்றி. தனது முழு திறமையும் கொடுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் முதுகுத்தண்டு இவர்தான். இப்படம் நிச்சயம் வெற்றிபெரும் உங்கள் அனைவரையும், பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.