உதயநிதி ஸ்டாலின் படத்தில் எஸ் வி சேகர்… சக்கர பொங்கல் வடகறி காம்பினேஷன்!
திமுக இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் எஸ்வி சேகர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.
போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஆர்ட்டிகிள் 15 ரீமேக் படம் தமிழில் உருவாக இருந்தது. இந்த படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த படம் ரிலீஸ ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இப்போது படத்தைப் பற்றிய ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.
படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் எஸ்வி சேகர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அரசியல் ரீதியாக உதயநிதியும் எஸ் வி சேகரும் எதிரெதிர் துருவத்தில் உள்ள நிலையில் இணைந்து ஒரே படத்தில் நடிக்க சம்மதித்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.