செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:55 IST)

அடுத்த 2 ஆண்டுகளில் 30 படங்களை தயாரிக்கும் எஸ் ஆர் பிரபு… எல்லாமே ஓடிடிக்குதானாம்!

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அடுத்து வரும் ஆண்டுகளில் மொத்தம் 30 லோ பட்ஜெட் படங்களைத் தயாரிக்க உள்ளாராம்.

தமிழின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் எஸ் ஆர் பிரபு. மொக்கை படத்தைக் கூட பக்காவா ப்ளான் போட்டு பிஸ்னஸ் செய்து கல்லா கட்டி விடுவார் என்று அவரைப் பற்றி சொல்லப்படுவது உண்டு. இந்நிலையில் இப்போது வரிசையாக 30 லோ பட்ஜெட் படங்களைத் தயாரித்து ஓடிடியில் வெளியிட உள்ளாராம். அதில் 7 படங்கள் பெண்களை முக்கியக் கதாபாத்திரங்களாக கொண்டு உருவாக உள்ளதாம். ஏற்கனவே சூர்யா குடும்பத்தினர் தங்கள் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்வதால் திரையரங்க உரிமையாளர்கள் அவர்கள் மேல் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.