என்.ஜி.கே தோல்விப்படமா ? – தயாரிப்பாளர் பதில் !

Last Updated: சனி, 6 ஜூலை 2019 (11:38 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான என்.ஜி.கே படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
 

கடந்த சில ஆண்டுகளாகவே சூர்யாவின் படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றிப் பெறாத சூழ்நிலையில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வந்தது என்.ஜி.கே. இந்தப்படத்தின் இயக்குனர் செல்வராகவன் என்பதும் அந்த எதிர்பார்ப்புக்கு முக்கியக்காரணம். ஆனால் முதல் காட்சியில் இருந்தே மிக மோசமான விமர்சனங்களைப் பெற்ற என்.ஜி.கே படம் சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டது. கொஞ்சம் கூட அரசியல் புரிதல் இல்லாமல் எடுக்கப்பட்ட படமென நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

அதனால் சில நாட்களிலேயே எல்லா தியேட்டர்களில் இருந்தும் படம் தூக்கப்பட்டது. படம் ரிலிஸாகி ஒரு மாதத்திலேயே இப்போது அமேசான் ப்ரைமிலும் படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் படுதோல்வி எனப் பேச்சுக்கள் எழவே அதை மறுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘என்.ஜி.கே தோல்விப்படம் அல்ல. எனக்கு லாபம் தந்த படம்தான். அதுபோலவே கார்த்தி நடித்த காஷ்மோராப் படமும் தோல்விப்படம் அல்ல’ என விளக்கம் அளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :