தனுஷ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா… லேட்டஸ்ட் அப்டேட்!
நடிகர் தனுஷ் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் திறமைமிகு நடிகர்களில் ஒருவரான தனுஷ், பவர் பாண்டி மூலம் இயக்குநராகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார். இதை அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அந்த படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ் இப்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தின் திரைக்கதைப் பணிகளில் இப்போது தனுஷ் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாகவும், நடிகர் விஷ்ணு விஷால் ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.