செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (08:48 IST)

முதல் முதலாக போலீஸ் வேடத்தில் தனுஷ்… ஹெச் வினோத் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்பாக அவர் யோகி பாபு நடிப்பில் ஒரு சிறு பட்ஜெட் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனுக்காக ஹெச் வினோத் உருவாக்கியுள்ள கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வினோத், சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களும் உண்மை சம்பவங்களின் அடிப்படையிலேயே உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் படத்துக்கு முன்பாக ஹெச் வினோத் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தை லலித்குமார் தயாரிக்க உள்ள நிலையில், இந்த படத்தில் தனுஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.