செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (09:25 IST)

விஷாலுக்கு வில்லனாகும் எஸ் ஜே சூர்யா… சம்பளத்தை ஏற்றி ஷாக்!

மாநாடு படத்தின் வெற்றி காரணமாக எஸ் ஜே சூர்யா தனது சம்பளத்தை ஏற்றியுள்ளாராம்.

விஷால் சர்ச்சை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை அனுகியுள்ளனர்.

மாநாடு படத்தின் அமோக வெற்றியால் எஸ் ஜே சூர்யா தன்னுடைய சம்பளத்தை 6 கோடியாக உயர்த்தி அவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளாராம். ஆனாலும் வேறு வழியின்றி படக்குழு அந்த சம்பளத்துக்கே ஓகே சொல்லி அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாம்.