1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 12 ஜூன் 2023 (15:28 IST)

எஸ் ஜே சூர்யா & பிரியா பவானி சங்கர் நடிக்கும் பொம்மை படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ரிலீஸ்!

மான்ஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணி ராதாமோகன் இயக்கத்தில் "பொம்மை" படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்த படம் இப்போது ஜூன் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்துக்காக எஸ் ஜே சூர்யா தனி ஆளாக ப்ரமோஷன் பணிகளை செய்து வருகிறார். அதனால் படத்துக்கு எதிர்பர்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இப்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.