அஜித் வாங்கிக் கொடுத்த காரை இப்போது வைத்திருக்கிறீர்களா?... எஸ் ஜே சூர்யா சொன்ன பதில்!
மான்ஸ்டர் படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் "பொம்மை" படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடித்துள்ளனர்.. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்த படம் இப்போது ஜூன் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது.
படத்தின் ரிலீஸை முன்னிட்டு பல ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் எஸ் ஜே சூர்யா கலந்துகொண்டு வருகிறார். அதில் ஒரு நேர்காணலில் அவர் சொன்ன ஒரு தகவல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. வாலி படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித், அந்த படத்தின் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுக்கு ஒரு புதிய சாண்ட்ரோ காரை வாங்கிக் கொடுத்தார். அது அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பின்னர் ஒரு ட்ரண்ட்டாகவே ஆனது.
இந்நிலையில் அந்த பேட்டியில் அஜித் வாங்கிக் கொடுத்த காரை இப்போதும் வைத்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு எஸ் ஜே சூர்யா “அந்த காரை நான் ஒரு மூன்று வருடம் வைத்து ஓட்டினேன். அதை புணரமைத்து என் தந்தையும் தோழர் ஒரு பாதிரியாருக்குக் கொடுத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார். அதே போல அஜித் வாங்கிக் கொடுத்த பைக்கையும் தன் நண்பர் ஒருவருக்குக் கொடுத்து விட்டதாகக் கூறியுள்ளார்.