1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:11 IST)

ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை இறந்ததாக பரவிய வதந்தி… கணவர் மறுப்பு!

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமான நடிகை டான்யா இறந்துவிட்டதாக வதந்தி பரவியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரோஜர் மூரின் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படமாக அமைந்த திரைப்படம் எ வியு டி அ கில் ( A Vie to a Kill). அந்த படத்தில் நாயகியாக நடித்தவர் டான்யா. அதுமட்டுமில்லாமல் மேலும் சில ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்து பிரபலமானார். தற்போது 65 வயதாகும் அவர் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்தார்.

அதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் இறந்து விட்டதாக சமுகவலைதளங்களில் பரவிய செய்தியால் ரசிகர்கள் சோகமானார்கள். ஆனால் டான்யாவின் கணவர் லான்ஸ் ஓ ப்ரையன் தனது மனைவி இறக்கவில்லை அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.