செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (11:40 IST)

ஓர் இரவுக்கு எவ்வளவு… ரசிகரின் ஆபாசக் கேள்வி – மருத்துவரைப் பார்க்க சொன்ன நடிகை!

நடிகை நீலிமாவிடம் ஆபாசமாக பேசிய ரசிகருக்கு அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்துவங்கும் சுவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் நீலிமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 'வாணி ராணி', 'தாமரை', 'தலையணை பூக்கள்' அரண்மனைகிளி' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் சீரியல்களை ஒதுக்கிவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார். அவ்வப்போது சில படங்களில் நடித்துக் கொண்டும் இருக்கிறார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ரசிகர்களிடம் பேசிய என்னிடம் கேடக ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என்று கூற ரசிகர் ஒருவர் ஆபாசமாக ‘ஒரு இரவுக்கு எவ்வளவு?” என்று கேட்டு முகம் சுளிக்க வைத்தார்.

அவருக்கு பதிலளித்த நீலிமா ‘நான் கொஞ்சம் மரியாதையை எதிர்பார்க்கிறேன் சகோதரா. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். சக நபரகளை அவமதிப்பது மனநோயாளிகளின் வேலை. நீங்கள் ஒரு மன நல மருத்துவரைப் பாருங்கள். உங்களுக்கு அந்த உதவி தேவை’ எனக் கூறியுள்ளார்.