1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:55 IST)

மரண தண்டனை ஒன்றே இதற்கு தீர்வு: விஜயகாந்த் ஆவேசம்

பாலியல் குற்றங்களுக்கு எதிராக போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும் பெண்களின் மீதான குறிப்பாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது 
 
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஹாத்ராஸ் என்ற கிராமத்தில் உள்ள இளம் பெண்ணுக்கு நடந்த கூட்டு பாலியல் பலாத்காரத்தால் இந்தியாவே அதிர்ச்சியில் இருந்தது. இந்த நிலையில் பாலியல் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை ஒன்றே தீர்வு என கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
 
மேலும் பட்டியலின பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்தின் இந்த கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது