1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (10:06 IST)

சித்ராவுக்கு வரதட்சணை கொடுமையா? 16 பக்க அறிக்கையை தாக்கல் செய்த ஆர்.டி.ஓ!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை அருகே உள்ள தனியார் வில்லா ஒன்றில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியது 
 
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சித்ராவின் கணவர் ஹேமந்த் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சித்ரா மரணம் குறித்து அவருடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி சித்ரா மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணையும் சமீபத்தில் தொடங்கியது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சித்ரா மரணம் தொடர்பாக விசாரணையை முடித்த ஆர்டிஓ 16 பக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்
 
சித்ரா உடன் தொடர்புடையவர்கள் 15 பேரிடம் விசாரணை நடத்தி போலீசாரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வரதட்சனை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்யவில்லை எனவும் அந்த அறிக்கையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன