1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (18:57 IST)

ரூ.4.5 கோடி செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம்..!

vimal
நடிகர் விமல் மீது ரூ.4.5 கோடி செக் மோசடி வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கை அவர் தாமதப்படுத்துவதாக நீதிமன்றம் அவருக்கு 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 
 
நடிகர் விமல் தயாரித்து நடித்த மன்னார் வகையறா என்ற படத்திற்காக ரூ.4.5 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார், அந்த கடனுக்காக அவர் கொடுத்த காசோலை பணமில்லாமல் திரும்பி வந்ததை அடுத்து அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நடிகர் விமல் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. மேலும் அவரது சார்பில் ஒரு மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. 
 
ஆனால் இந்த மனு வழக்கை காலதாமதப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறிய நீதிபதி விமலுக்கு ரூபாய் 300 ரூபாய் அபராதம் வைத்து ஏப்ரல் 25ஆம் தேதி இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.
 
Edited by Siva