நான் கதைகளை திருடுகிறேன்… ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் பேச்சு!
இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கிய அனைத்து படங்களுக்கும் கதை எழுதியது அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தான். பாகுபலி வெற்றிக்குப் பின்னர் அவர் இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் கதாசிரியராக ஆகியுள்ளார். சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்துக்கும் அவர்தான் கதை எழுதியுள்ளார்.
இந்நிலையில் அவர் கோவாவில் நடந்த 53 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர் “நான் கதைகளை எழுதுவதில்லை. திருடுகிறேன். நம்மை சுற்றி கதைகள் உள்ளன. மகாபாரதம், ராமாயணம் போல. அதுபொல நிஜ வாழ்க்கையிலும் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன.” என பேசியுள்ளார்.