1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (20:37 IST)

#RRR - 10 பேருடன் ஷுட்டிங்ற்கு வரும் பிரபல நடிகை.... ஒருநாளில் இவ்வளவு செலவா???

இந்தி நடிகை ஆலியாபட் தனது  பத்து உதவியாளர்களுடன் ஹூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதாகவும் அவர்களுக்கு லட்சத்திற்கு செலவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண் அல்லூரி சீதராம ராஜூவாக நடித்துள்ள கதாப்பாத்திர ப்ரமோ வெளியானது.

இதையடுத்து, ஜூனியர் என். டி. ஆர் நடித்துள்ள கதாபாத்திரப் ப்ரோமோ வெளியானது. இதில் ஜூனியர் என்.டி,.ஆர் , கொமரம் பீம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொமரம் பீமை ஒரு மதத்திற்குள் அடக்க முயற்சி செய்துள்ளதாக ராஜமௌலி மீது விமர்சனம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், பழங்குடியின மக்களிடையே இதற்குக் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

கொமரம் பீம் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டுமெனவும் குரல் கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் ராஜமௌலி பாகுபலி1,2 ஆகிய படங்களுக்குப் பிறகு இப்படத்தையும் பிரமாண்டமான முறையில் உருவாக்கி வருகிறார். 

இந்நிலையில் இப்படத்திலிருந்து பாலிவுட் நடிகை ஆலியாபட் நீக்கப்பட்டுவிட்டதாகவும் அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில்,  இன்று ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆலியட்டுடன் பேசிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராஜமௌலி இப்படத்தின் மேலே கேப்சமாக #RRR #Sita என்று பதிவிட்டுள்ளார். இப்படத்தில் ஆலியாபட்டின் கதாப்பத்திரம் சீதாவாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகிறது.

மேலும்  இப்படப்பிடிப்பிற்கு ஆலியாபட் ஒரு பத்து உதவியாளர்களுடன் வருவதாகவும் அவர்களுக்கு லட்சத்திற்கு செலவு செய்யப்படுவதாகவும் தெரிகிறது. #RRR #Rajamouli #Aliabhutti