மீண்டும் நடிக்க வருகிறார் ‘சிவராத்திரி’ புகழ் ரூபிணி !

Last Modified புதன், 12 பிப்ரவரி 2020 (12:47 IST)

முன்னாள் நடிகையான ரூபிணி நீண்ட கால இடைவெளிக்க்ய்ப் பிறகு இப்போது மீண்டும் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

90 களின் ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களில் உச்ச நட்சத்திரங்களோடு ஜோடியாக நடித்தவர் ரூபிணி. கமலுடன் அவர் நடித்த
மைக்கேல் மதனகாமராஜன் படமும் அதில் இடம்பெற்ற சிவராத்திரி என்ற பாடலும் இன்றும் யுட்யூப் ஹிட்.

இந்நிலையில் திருமணத்துக்குப் பின் காணாமல் போன ரூபினி இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால் சினிமாவில் அல்ல தொலைக்காட்சி சீரியலில். 20 வருடங்களுக்கு முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடரின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ரூபிணி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :