1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (16:36 IST)

ரோலிங் ஸ்டோன்ஸ் அட்டைப்படத்தில் தெருக்குரல் அறிவு! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டவர்கள் இது சம்மந்தமாக அறிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது கவனத்தை ஈர்த்தது.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் இரு வாரங்களுக்கு  எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். குரலில்  ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது. வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது.

இப்போது வரை இந்த பாடல் யுடியுபில் 30 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் பெரிய நடிகர்களின் சினிமாப் பாடல்களுக்குக் கூட கிடைக்காத வரவேற்பு இந்த தனியிசைப் பாடலுக்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில் ரோலிங் ஸ்டோன் என்ற பத்திரிக்கை மிகவும் பிரபலமான பாடல்களை பாடியவர்களை அங்கிகரிக்கும் பொருட்டு அவர்களின் நேர்காணலையும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டது. ஆனால் அதன் அட்டை படத்தில் தீ படம் மட்டுமே இடம்பெற்றது. அறிவு புறக்கணிக்கப்பட்டதாக இப்போது சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டவர்கள் அறிவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவாகிய நிலையில் இப்போது ரோலிங் ஸ்டோன்ஸ் அட்டைப்படத்தில் தெருக்குரல் அறிவுவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.