1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (10:27 IST)

இதென்னடா பித்தலாட்டமா இருக்கு… இணையத்தில் ட்ரோல் ஆகும் ரோஜா சீரியலின் காட்சி!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா என்ற தொலைக்காட்சி தொடர் இப்போது இணையத்தில் செம்மயாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் வரவர அபத்தக் களஞ்சியமாக மாறி வருகின்றன. ஆழமான காட்சிகளோ நேர்த்தியான உருவாக்கமோ தமிழ் சீரியல்களில் துளியும் கிடையாது. 10 நிமிடத்தில் காட்டவேண்டியதை 12 மணிநேரம் காட்டி மக்களின் நுன்னுணர்வை சீண்டும் விதமாகவே உள்ளன.

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற தொடரின் காட்சி ஒன்று இப்போது இணையத்தில் கலாய்க்கப்பட்டு வருகிறது. அந்த தொடரில் ரோஜா என்ற பெண்ணை கொல்வதற்கு அனு என்ற பெண் முயற்சி செய்கிறார். அதை அறிந்து கொண்ட ரோஜா & கோ அனுவை சிறைக்கு அனுப்ப ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி அனுவின் துப்பாக்கியில் போலியான தோட்டாவை போட்டு விடுகின்றனர். இதனால் ரோஜா சாவதில்லை. ஆனால் ரோஜா இறந்துவிட்டதாக நம்ப வைக்க வேறொரு பெண்ணின் சடலத்தை எடுத்து வந்து வைக்கின்றனர். அந்த பெந்தான் ரோஜா என நம்ப வைக்க, அவர் முகத்தில் ஒரு பொம்மை முகமூடிய வைத்து ஒத்தி எடுக்க, அவரின் முகம் ரோஜாவாக மாறுகிறது.

இதைப் பார்த்து கடுப்பான இணையவாசிகள்தான் இப்போது அந்த வீடியோவை பகிர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.