1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

கொரோனா பரவல் எதிரொலி: இண்டிகோ நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா பரவல் காரணமாக இண்டிகோ நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு விமான பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் குறிப்பாக இந்தியாவில் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமாகி வருவதன் காரணமாக இண்டிகோ நிறுவனம் 20 சதவீத விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே விமான பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் பயண தேதி மாற்றி கொள்ளவோ அல்லது விமான பயணத்தை ரத்து செய்து கட்டணத்தைத் திரும்பப் பெறவோ செய்து கொள்ளலாம் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
இதற்காக அந்நிறுவனம் மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.