புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (20:46 IST)

திருமண நாளில் முதல்வரிடம் ஆசி பெற்ற நடிகை ரோஜா

திருமண நாளில் முதல்வரிடம் ஆசி பெற்ற பிரபல நடிகை!
திரைப்பட இயக்குனரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணியின் மனைவியும், ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா-செல்வமணி தம்பதியினரின்  19 வது  திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டது.
 
இதனை முன்னிட்டு ரோஜா, செல்வமணி தம்பதியை நேரில் அழைத்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருவருக்கும் மலர் தூவி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். இந்த சந்திப்பின்போது ரோஜா-செல்வமணியின் மகள், மகன் ஆகியோர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, நடிகை ரோஜா தலையில் கை வைத்து ஆசிபெறும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விரைவில் நடிகை ரோஜாவுக்கு புதிய பதவி ஒன்றையும் முதல்வர் அளிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது