வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 18 மே 2018 (20:46 IST)

ஆர்.ஜே.பாலாஜியின் அதிரடி அரசியல் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பது புதிதில்லை.  கவுண்டமணி முதல் சந்தானம்  வரை பலர் ஹீரோவாகியுள்ள நிலையில் தற்போது காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜியும் ஹீரோவாகியுள்ளார்.
 
ஆம், ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் குறித்த அறிவிப்பை ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டரிலும் வெளியிட்டுள்ளார்.
 
இதன்படி இந்த படத்தின் டைட்டில் 'LKG' என்பதாகும். அரசியல் படமான இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி அரசியல்வாதியாக நடிக்கின்றார். இந்த படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சேர்மன் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபு என்பவர் இயக்கவுள்ளார்.
 
இந்த படத்திற்காகத்தான் கடந்த சில நாட்களாக சுவர் விளம்பரம் மற்றும் கொடி விளம்பரம் ஆகியவை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காமெடி நடிகராக வெற்றி பெற்ற நடிகர் ஆர்ஜே பாலாஜி, ஹீரோவாகவும் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்