ஆர்.ஜே.பாலாஜியின் 'LKG' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Last Modified திங்கள், 11 பிப்ரவரி 2019 (19:41 IST)
காமெடி நடிகர்கள் பலர் ஹீரோவாகிவிட்ட தமிழ் சினிமாவில் ஆர்.ஜே.பாலாஜியும் ஹீரோவாகிய படம் தான் ''LKG'. அரசியல் நையாண்டி திரைப்படமான இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இணையதள பயனாளிகளின் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த படம் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் 'அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தேர்தல் தேதி அறிவிப்பு....! என அறிவித்ததோடு ரிலீச் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த போஸ்டரில் ஆர்.ஜே.பாலாஜியுடன் நாயகி ப்ரியா ஆனந்த் உள்ளார்.
பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

''LKG' வெளியாகும் அதே பிப்ர்வரி 22ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படமும் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :