புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 பிப்ரவரி 2019 (08:37 IST)

எல்.கே.ஜி வெற்றிக்கு வித்தியாசமாக நன்றி தெரிவிக்கும் ஆர்ஜே பாலாஜி!

கடந்த சில ஆண்டுகளாக பெரிய பட்ஜெட் படங்களே போட்ட முதலீடை எடுக்க முடியாமல் திணறி நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் சின்ன் பட்ஜெட்டில் அனைவரையும் கவரும் வகையில் 'எல்.கே.ஜி' திரைப்படத்தை உருவாக்கிய ஆர்ஜே பாலாஜியின் டீம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகி மூன்றே நாட்களில் முதலீட்டை திரும்ப பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படம் லாபத்துடன் வெற்றி நடை போடுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் சக்சஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளுக்கு படகுழுவினர் நன்றி தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டரில், ''எல்.கே.ஜி' படத்தின் மாபெரும் வெற்றி நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம். இந்த வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி! இதற்கு கைமாறாக கஜா புயல் பாதித்த பகுதியில் உள்ள பத்து அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடிவு செய்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.