வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 30 நவம்பர் 2018 (15:58 IST)

நடிகர் பரோட்டா சூரியை கண் கலங்க வைத்த காட்சி...

நம் தமிழக டெல்டா பகுதிகளை கஜா சூறையாடிச் சென்றதால் பல மக்கள் பல்லாண்டுகளாக வீடு ,வாசல், தோப்புகள் என   வைத்திருந்தவர்கள் கூட புயல் வந்த ஒரே இரவில் எல்லாவற்றையும் இழந்துவிட்டு தங்க வீடுகள் இன்றி பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார்கள்.
தமிழகத்தின்  பல்வேறு பகுதியிலிருந்து  பகுதியிலிருந்து நம் சகோதர்களுக்கு தேவையான உதவிகளை மக்கள் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில் புயல் பாதித்த தஞ்சை பகுதியில் மீனூ தினங்களாக தங்கி இருந்து மக்களுக்கு உதவி வருகிறார் காமெடி நடிகர் சூரி.
 
இது குறித்து அவர் கூறியதாவது:
 
டெல்டா மாவட்ட மக்கள் இந்த சோகத்திலிருந்து மீண்டு வர பல வருடங்கள் ஆகும். மக்கள்  சோகத்தில் பேசுவதைக் கேட்கும் போது என் கண்ணில் கண்ணிர் வருகிறது. எல்லாவற்றையும் இழந்துவிட்டு நின்று கண்ணீருடன் அவர்கள் பேசும் போது என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. இவ்வாறு சூரி தெரிவித்தார்.