புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 30 நவம்பர் 2018 (15:13 IST)

2.0 வெற்றியை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படப்பிடிப்பு ஆரம்பம்!

ரஜினி மற்றும் முருகதாஸ் இணையும் படம் வரும் மார்ச் மாதத்தில் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 படம் நேற்று வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் ரஜினியையும் 2.0 படக்குழுவினரையும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் 2.0 படத்தின் வெற்றியை ரஜினி  ரசிகர்கள் கொண்டாடி தீர்பதற்குள் அடுத்த அப்டேட் வந்துவிட்டது.
 
அதாவது , தளபதி விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் , சூப்பர் ஸ்டார் ரஜினி இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறார்களாம் .
 
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2019 மார்ச் மாதத்தில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. மேலும் படம் 2020 ஆரம்பத்தில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.